தமிழ் பழமொழிகள் – English proverbs in tamil Language

gpkumar 57 Views
4 Min Read

தமிழ் பழமொழிகள் மிகுந்த அருமையான பண்பாட்டு மரபுகளை உள்ளடக்கியுள்ளன. இவை மக்களின் வாழ்க்கை அனுபவங்களை, அறிவை, முத்திரைகளை மற்றும் வாழ்க்கையின் முக்கிய பாடங்களை குறிக்கின்றன. இவை அனைவருக்கும் புதிய பாடல்களை கற்றுக் கொள்ள மிகுந்த முக்கியமான மூலமாக இருக்கின்றன. இதோ, உங்களுக்காக சில தமிழ் பழமொழிகள்.

 

உங்களுக்கு விருப்பமான தமிழ் கவிதைகளை படித்து மகிழுங்கள்

[epcl_button label=”TamilGuru.in இப்போது WhatsAppல்” url=”https://whatsapp.com/channel/0029VaFH3Gg0LKZ5AhMPoq0v” type=”flat” color=”green” size=”fluid” icon=”fa-whatsapp” target=”_blank” rel=”dofollow”][/epcl_button]

 

Proverbs in Tamil

1. Look before you leap – ஆழம் தெரியாமல் காலை விடாதே
2. As the fool thinks so the bell clinks – அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
3. Put a beggar on horseback – அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த இராத்திரியில் குடை பிடிப்பான்
4. New brooms sweep well – புதிய துடைப்பம் நன்றாக பெருக்கும்
5. Tit for Tat – பழிக்கு பழி
6. Do in Rome as Romans do – ஊரோடு ஒத்து வாழ்
7. A closed mouth catches no flies – நுணலும் தன் வாயால் கெடும்
8. The face is the index of the mind – அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
9. The mills of God grind slow but sure – அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொள்ளும்
10. Empty vessels make the most noise – குறைகுடம் கூத்தாடும்
11. Art is long and life is short – கல்வி கரையில் கற்பவர் நாள் சில
12. East or West, Home is the best – எலி வளையானாலும் தனி வளை வேண்டும்
13. A bird in the hand is worth two in the bush – அரசனை நம்பி புருஷனை கைவிடாதே /கிடைக்கப்போகும் பலாக்காயை விட, கையில் இருக்கும் களாக்காயே மேல்
14. All that glitters are not gold – மின்னுவதெல்லாம் பொன்னல்ல
15. A young calf knows no fear – இளங்கன்று பயமறியாது
16. Let patience have her perfect work – ஆக்க பொறுத்தவன் ஆற பொறுக்கணும்
17. Barking dogs seldom bite – குரைக்கிற நாய் கடிக்காது
18. Covert all, lose all – பேராசை பெரு நட்டம்
19. After a storm cometh a calm – புயலுக்குப் பின்னே அமைதி
20. A bad workman blames his tools – ஆட தெரியாதவள் தெருக்கோணல் என்றாள்
21. Adding fuel to the fire – எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற் போல்
22. A wild goose never laid a tame egg – புலிக்குப் பிறந்தது பூனையாகாது
23. A wise enemy is better than a foolish friend – முட்டாள் நண்பனைவிட கற்றறிந்த பகைவனே மேல்
24. A burnt child dreads the fire – சூடு கண்ட பூனை அடுப்படி வராது
25. Pride comes before fall – அகம்பாவம் அழிவைத் தரும்
26. A guilty conscience needs no accuser – குற்றமுள்ள நெஞ்சு குறு குறுக்கும்
27. A honey tongue and a heart of gall – அடி நாக்கிலே நஞ்சம், நுனி நாக்கிலே தேனும்
28. A hungry man is an angry man – பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்
29. Call a spade a spade – உள்ளதை உள்ளவாறு சொல்
30. Don’t measure the worth of a person by their size – கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது மூர்த்தி சின்னதானாலும் கீர்த்தி பெரியது
31. A Leopard Never Changes Its Spots – ஜென்ம புத்தி செருப்பால் அடித்தாலும் போகாது
32. Habits Die Hard – தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்
33. Cleanliness is next to Godliness – தூய்மையே இறைவனுக்கு அடுத்ததாகும்
34. Coming events cast their shadow before – ஆனை வரும் பின்னே

Share This Article
Exit mobile version