தேர்தல் கருத்துக்கணிப்புக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது

Selvasanshi 1 View
2 Min Read

தேர்தல் கருத்துக்கணிப்புக்கு ஏப்ரல் 29-ம் தேதி வரை தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள்து.

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு,கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்கு பிறகு கருத்துக் கணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

சட்டப்பேரவை இடைத் தேர்தல் மற்றும் மக்களவை இடை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தலுக்கு பிறகு வெளியிடப்படும் கருத்துக் கணிப்புக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம்அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அறிவிப்பின்படி தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது:

இந்த ஆண்டு பிப்ரவரி 26 மற்றும் மார்ச் 16 ஆகிய தேதிகளில் வெளியிட்ட பத்திரிகை குறிப்பில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தபடி, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, அசாம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி மற்றும் மக்களவை இடைத்தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில், இன்று காலை 7 மணி முதல் 2021 ஏப்ரல் 29ம் தேதி மாலை 7.30 மணி வரை, இந்த இடைபட்ட காலத்தில் தேர்தலுக்கு பிறகு கருத்துக் கணிப்பு நடத்தவோ கூடாது என்று தெரிவித்துள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 126ஏ பிரிவு துணைப்பிரிவு 1-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின் படி, தேர்தலுக்கு பிறகு கருத்துக் கணிப்பு மற்றும் தேர்தல் முடிவுகளை அச்சுயிடுதால் போன்ற விஷயங்களை எலக்ட்ரானிக் ஊடகங்கள் அல்லது வேறு விதத்தில் வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மேலும் சட்டப்பேரவை பொது தேர்தல் மற்றும் இடைத் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் ஒவ்வொரு கட்ட தேர்தல் முடியும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 126(1)(பி) பிரிவின் கீழ், கருத்து கணிப்பு அல்லது எந்தவித கணக்கெடுப்பு முடிவுகள் உட்பட தேர்தல் தொடர்பான எந்தவொரு விஷயத்தையும் எலக்ட்ரானிக் ஊடகங்களில் வெளியிட தடைவிதிக்கப்படுகிறது.

மார்ச் 24ம் தேதி இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பும், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Share This Article
Exit mobile version