காது வலி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரக்கூடியதாகும். பெரும்பாலும் மழைக்காலங்களில் அதிகமாக சலிப்புடிப்பதனால் காதுவலி ஏற்படுகிறது. மேலும் அதிக இரைச்சல் காரணமாகயும் இவ்வலி ஏற்படுகிறது. தொண்டையில் ஏற்படும் அலர்ஜியினாலும், மூக்கை சிந்துவதாலும் காது வலி வரும். பொதுவாக இரவில்தான் காதுவலி அதிகமாக வரும் அப்பொழுது எதையாவது வைத்து சுத்தம் செய்வதை தவிர்க்கவும். ஏன்னென்றால் காதுக்குள் கிருமி தொற்று ஏற்படும்.குழந்தைகளுக்கு காது வலி வந்தால் உடனே மருத்துவரிடம் செல்லவேண்டும். பெரியவர்களுக்கு காது வலி வந்தால் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து என செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
- தேங்காய் எண்ணெய் பொதுவாக மருத்துவகுணம் உள்ள ஒரு எண்ணெய் ஆகும். எந்த எண்ணையை சூடேற்றி சிறிதளவு உப்பு சேர்த்து மீதமான சூட்டில் காதுக்குள் விடலாம். காது வலி குறையும் மேலும் காதில் புண் இருந்தால் ஆறிவிடும்.
- கொஞ்சம் நல்எண்ணெயில் ஒரு கிராம்பை சேர்த்து சூடு செய்து மிதமான சூட்டில் வலியுள்ள காதில் விடவும் இது விரைவில் வலியை போகும்.
- தூதுவளை இலையை நீரில் போடு கொதிக்கவைத்து காலை மாலை இருவேளை குடித்து வந்தால் காது வலி விரைவில் குறையும்.
- மருதாணி வேரை எடுத்து நசுக்கி அதில் சாறினை காதில் விட்டால் வலி குறையும்.
- தாழம்பூவை நெருப்பு தணலில் காட்டி சாறு பிழிந்து காதில் விட்டால் காது வலி குறையும் மற்றும் காதில் தோன்றும் கட்டி குணமாகும்.