கொரோனா சிகிச்சைக்கு உதவும் டிஆர்டிஓ வின் புதிய மருந்து

Pradeepa 2 Views
1 Min Read

டெல்லியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தனும் சேர்ந்து கொரோனா சிகிச்சைக்கு உதவும் டிஆர்டிஓ வின் புதிய கொரோனா தடுப்பு மருந்தான 2-DG ஐ பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.

டிஆர்டிஓ வின் இன்மாஸ் ஆய்வக விஞ்ஞானி கண்டுபிடித்த 2-DG தடுப்பு மருந்து பவுடர் வடிவில் உள்ளது. இந்த பவுடரை நீரில் கலந்து பருகினால் 2 அல்லது 3 தினங்களுக்கு முன்னதாகவே கொரோனா வைரஸ் தொற்று சரி ஆகிவிடும் என்று ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டதாக டிஆர்டிஓ கூறியுள்ளது.

இந்த மருந்தின் மூலம் ஆக்ஸிஜன் தேவையும் குறைவதாக தெரிவித்துள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனம் டிஆர்டிஓ உடன் சேர்ந்து 2-DG மருந்தை தயாரிக்கிறது.

Share This Article
Exit mobile version