- Advertisement -
SHOP
Homeஅறிந்துகொள்வோம்DRDO பினாகா ராக்கெட் சோதனையை நேற்று நடத்தியது

DRDO பினாகா ராக்கெட் சோதனையை நேற்று நடத்தியது

- Advertisement -

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ இந்தியாவில் உருவாக்கப்பட்ட நீண்ட தூரம் சென்று தாக்கும் பினாகா ராக்கெட் பரிசோதனையை நேற்று(வெள்ளிக்கிழமை) நடத்தியது.

ஒடிஸா மாநிலம், பாலேசுவரம் மாவட்டத்தில் உள்ள சண்டீபூரில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 25 பினாகா ராக்கெட்டுகளை ஏவுதள வாகனத்தில் இருந்து ஏவப்பட்டு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

rocket

பினாகா ராக்கெட் அமைப்பின் நீட்டிக்கப்பட்ட தூரமான 45 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை அழிக்கக்கூடும் என்று பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் டிஆா்டிஓவின் வெற்றிகரமான இந்த சோதனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

டிஆா்டிஓ செயலா் சதீஷ் ரெட்டி இந்த சோதனையில் ஈடுபட்ட குழுவினர் அனைவர்க்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

- Advertisement -
- Advertisement -
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -
Related News
- Advertisement -