மாத்திரை அட்டையின் பின்புறம் உள்ள சிவப்புக் கோடு எதற்கு தெரியுமா?

Selvasanshi 16 Views
2 Min Read

இந்தியாவில் கொரோனோவின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனோவின் இரண்டாவது அலை தீவிரமடைந்த நிலையில், மக்கள் மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், மருந்து வாங்கும்போது நாம் சில விஷயங்களை தெரிந்து கொள்ளவேண்டும். நாம் முடிந்தவரை மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் மருந்துகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

நம் உடலில் ஏற்படும் எல்லா பிரச்சினைகளுக்கு நாம் மருத்துவரிடம் செல்வதில்லை. மருந்துக் கடைக்குச் சென்று உடலில் உள்ள பிரச்சனையைச் சொல்லி மருந்தை வாங்கி சாப்பிடுகிறோம் இவ்வாறு செய்வது தவறு. மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்ற பின்னர் மருந்துகளை வாங்கி எடுத்துக்கொள்ளுங்கள்.

கொரோனா சமயத்தில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சு பிரச்சினை, உடல் சோர்வு, பசியின்மை, செரிமான பிரச்சினை போன்ற அறிகுறிகள் தோன்றினால் எது கொரோனா தொற்று நோய், எது சாதாரண பிரச்சினை என்று தெரியாமல் மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

மாறிக்கொண்டு வரும் உணவுமுறையாலும், வாழ்க்கைமுறையாலும் நம்மில் பலருக்கு தலைவலி, கால்வலி, மூட்டுவலி வாய்வுகோளாறு, நெஞ்சுக்கரிப்பு என்று ஏதாவது ஒரு பிரச்சினை இருந்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்த அறிகுறிகளுக்கு மருத்துவரை ஆலோசித்துப் பிறகு மாத்திரைகள் எடுத்துக் கொள்ளவேண்டும். இதனால் நமக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

நீங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்காமல் அவசரத்திற்கு நோரடியாக மருந்துக் கடைக்கு சென்று வாங்கும் மருந்து என்றாலும் அதை சரிப்பார்க்க வேண்டும். முதலில் மருந்து அட்டை காலாவதி தேதியைச் சரிபார்க்க வேண்டும். மேலும் மருந்து அட்டைக்குப் பின்புறத்தில் இருக்கும் குறியீடுகளைப் பற்றி நாம் அறிந்து கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும்.

மருந்து அட்டையின் பின்புறத்தில் இருக்கும் சிவப்பு கோடு, நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயமாகும். இது போன்ற சிவப்பு கோடு இருக்கும் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்துக்கொள்ள கூடாது. மருந்து கடைகளில் வேலை செய்பவர்கள் பெட்டிகளில் தலைவலி, காய்ச்சல் என எழுதி வைத்துக்கொண்டு நமக்கு எடுத்துக்கொடுப்பார்கள்.

நாம் முன்னெச்சரிக்கையுடன், இது போன்ற சிவப்பு நிற கோடுகள் இருக்கும் மாத்திரைகளை வாங்க கூடாது. சிவப்பு கோடுகள் இருக்கும் மருந்துகள் “ஆன்டிபயாடிக் மருந்து” ஆகும். இதை அனுபவம் பெற்ற மருத்துவரின் ஆலோசனை இல்லாமல், தெரியாமல் அதிக அளவு எடுத்துக்கொண்டால் உயிருக்கு ஆபத்து வரும் நிலை உருவாகலாம். எனவே, எச்சரிக்கையுடன் மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி வாங்கி சாப்பிட வேண்டும்.

Share This Article
Exit mobile version