ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்கும் திமுக எம்எல்ஏ எம்பிக்கள் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 Min Read

ஹைலைட்ஸ்:

  • தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
  • திமுக எம்எல்ஏ, எம்பிக்கள் தங்களது ஒரு மாத கால ஊதியத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவார்கள்.
  • முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க பலர் நிதி வழங்கி வருகிறார்கள்.

கொரோனா தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள திமுக எம்எல்ஏ, எம்பிக்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்காக நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க பலர் நிதி வழங்கி வருகிறார்கள். முதலமைச்சர் வேண்டுகோளின் பேரில் திரைப்பிரபலங்களும் நிதி வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது திமுக எம்எல்ஏ, எம்பிக்கள் தங்களது ஒரு மாத கால ஊதியத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கொரோனா நிவாரண நிதிக்கு பாமக எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கட்சி எம்.எல்.ஏக்களும் தங்கள் மாத ஊதியத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
Exit mobile version