தனுஷுக்கு ஜோடியாகும் உப்பேனா திரைப்பட புகழ் க்ரித்தி ஷெட்டி

Pradeepa 2 Views
1 Min Read

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான மாரி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரேவற்பு பெற்றது. இதை அடுத்து மாரி 2 திரைப்படத்தை எடுத்து வெளியிட்டனர். இந்நிலையில் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் மூன்றாவது முறையாக நடிக்கவிருக்கிறார்.

அது மாரி 3 படமா அல்லது புது கதையா என்பது இதுவரை தெரியவில்லை. பாலாஜி மோகன் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ட்ரிண்டிங்கி தெலுங்கு நடிகை க்ரித்தி ஷெட்டியை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம். இது தொடர்பாக க்ரித்தியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது என்றும் கூறப்படுகிறது.

க்ரித்தி ஷெட்டி எனும் நடிகை புதுமுகம் புச்சி பாபு சனா இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டான உப்பேனா தெலுங்கு படத்தின் ஹீரோயின் என்றும் தெரிவித்துள்ளனர். விஜய் சேதுபதி உப்பேனா படத்தில் க்ரித்தியின் அப்பாவாக நடித்திருந்தார்.

க்ரித்தி ஷெட்டிக்கு 17 வயது அனால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்துள்ளனர். தன் வாழ்க்கையில் வந்த வாய்ப்புகளை தக்கவைக்க நடிகை க்ரித்தி சம்பளத்தை உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது. க்ரித்தி ஷெட்டி தனுஷுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்கிற செய்தியை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share This Article
Exit mobile version