Contact Information

Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York

We Are Available 24/ 7. Call Now.

இந்தியா முழுவதும் கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த நோயினால் பாதிக்கப்படுவோரை மீட்டெடுக்க பல்வேறு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மே மாதம் 17ஆம் தேதி 2டிஜி என்ற புதிய கொரோனா தடுப்பு மருந்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. மேலும் இதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த மருந்து, மருந்து பாதுகாப்பு துறையின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் கண்டு பிடிக்கப்பட்டது. 2DG கொரோனா தடுப்பு மருந்து தண்ணீரில் கலந்து குடிக்க கூடியது.

இந்த புதிய கொரோனா தடுப்பு மருந்து, சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், டிஆர்டிஓ மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேப் இணைந்து தயாரித்துள்ள 2டிஜி கொரோனா மருந்தின் விலை ரூ.990 என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மருந்தினை யாரெல்லாம் பயன்படுத்தக் கூடாது என்பதையும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்து இருக்கிறது.

அதன்படி, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாரடைப்பு, நீரிய்வு நோயாளிகள், கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள் இந்த மருந்தை பயன்படுத்தக் கூடாது.

மேலும், சாதாரண முதல் சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு அதிகபட்சம் 10 நாட்களுக்கு மட்டுமே இந்த மருந்தை கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share: