நீர் இன்றி அமையாது உலகு – இவ்வுலகில் உணவு இல்லாமல் கூட வாழ முடியும் நீர் இன்றி வாழ முடியாது. நமது உடலில் 80 சதவீதம் நீர் நிறைந்துள்ளது. நமக்கு தேவையான அளவு நீர் எடுத்து கொண்டால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். ஒரு நாளைக்கு தேவையான நீரை எடுத்துகொண்டால் உடலில் ஏற்படாமல் தடுக்க முடியும்.

நீங்கள் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், உடலில் நீரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. நீரிழப்புக்கான எச்சரிக்கை அறிகுறிகளில் பலவீனம், குறைந்த இரத்த அழுத்தம், தலைச்சுற்றல், குழப்பம் அல்லது இருண்ட நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல் ஆகியவை அடங்கும்.

தண்ணீர் குடிக்க வேண்டிய அளவுகள்

45 கிலோ உள்ளவர்கள் – 1.9 லிட்டர்
50 கிலோ உள்ளவர்கள் – 2.1 லிட்டர்
55 கிலோ உள்ளவர்கள் – 2.3 லிட்டர்
60 கிலோ உள்ளவர்கள் – 2.5 லிட்டர்
65 கிலோ உள்ளவர்கள் – 2.7 லிட்டர்
70 கிலோ உள்ளவர்கள் – 2.9 லிட்டர்
75 கிலோ உள்ளவர்கள் – 3.2 லிட்டர்
80 கிலோ உள்ளவர்கள் – 3.5 லிட்டர்
85 கிலோ உள்ளவர்கள் – 3.7 லிட்டர்
90 கிலோ உள்ளவர்கள் – 3.9 லிட்டர்
95 கிலோ உள்ளவர்கள் – 4.1 லிட்டர்
100 கிலோ உள்ளவர்கள் – 4.3 லிட்டர்

தினமும் தேவையான அளவு நீர் குடிப்பதால் உடல் புத்துணர்ச்சியாகவும் இருக்கும், நமது உடலில் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கில் கழிவுகள் சேரும். எனவே நமது உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதற்கு தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும்.

 

நம் முன்னோர் பயன் படுத்திய எந்த முறையும் இப்போதும் நாம் கடைபிடிப்பதை மறந்துவிட்டோம் அந்த வகையில் தண்ணிர் குடிக்கும் முறையும் ஒன்று.இப்பொது மினெரல் வாட்டர்,RO வாட்டர் என வந்து விட்டது

முன்னோர் பயன் படுத்திய முறை

நம் முன்னோர் பயன் படுத்திய முறையான பரம்பரியம் நிறைந்த மண்பானை ,செம்புபத்திரத்தில் சேமித்து குடிக்கும் தண்ணீர் தான் அதிகமான சக்தி குடுக்கும் என்ன ஆய்வுகள் கூறுகிறது.

தண்ணீர் குடிக்கும் முறை

தினமும் நான்கு முதல் ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் , இந்த தண்ணீரை பாத்திரத்தில் சேமித்து குடிக்கும் பழக்கம் நம் முன்னோரிடம் இருந்தது. இப்பொது நவீன மாற்றத்துக்கு ஏற்ப நாம் மாறி பிளாஸ்டிக் , சில்வர் ஆகியவற்றில் உபயோகப்படுத்துகிறோம் .இதை செம்பு பாத்திரங்களில் ஒரு இரவு முன்பு ஊறவைத்து குடித்து வந்தால் அரோயகத்திற்கு நல்லது ஊற வைக்கும் போது தண்ணீரில் உள்ள கேட்ட பாக்டீரியாவை தடுக்கிறது செம்பு .

செம்பு நீர் தரும் நன்மை

செம்பு நீரை தொடர்ந்து குடித்து வந்தால் தண்ணீரில் இருக்கும் கிருமிகள் அழிந்து உடல் உள்ள உறுப்பை சீராக செயல் பட உதவுகிறது,நரம்பு மண்டலங்கள் சுறுசுறுப்பாக வேலை செய்ய உதவுகிறது , வேரும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் சூடு தணியும், கெட்ட கொழுப்புகளை அகற்றும் .