” டான் ”  திரைபடக்குழு…..

Selvasanshi 11 Views
1 Min Read
  • சிவகார்த்திகேயனின்  ” டாக்டர் ” திரைபடத்தின் பணிகள் முடிவடைந்து வரும்  மார்ச் மாதம் 26-ம் தேதி திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம்  சிவகார்த்திகேயன் – நெல்சன் திலீப் குமார் கூட்டணியில் தயாரிக்கபட்டுள்ளது. அடுத்து சிவகார்த்திகேயன்  ” டான் ”  படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • இந்த நிலையில் திரைபடக்குழு “டான்” படத்தில் நடிக்கும் நடிகர்களின் பெயரை  வெளியிட்டுயுள்ளது. டாக்டர் படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக  ப்ரியங்கா அருள் மோகன், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இணைந்து  நடிக்கிறார்.  லைகா தயாரிக்கும் ‘டான்’ திரைப்படத்தை அறிமுக இயக்குநராக சிபி  சக்கரவர்த்தி இயக்குவார் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
  • முதல்முறையாக இயக்குநர் மற்றும்  நடிகரும்மான  எஸ்.ஜே.சூர்யா சிவகார்த்திகேயன் உடன் இணைந்து “டான்” திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  டாக்டரைத் தொடர்ந்து டானுக்கும் அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
  • அதேபோல் சூரி – சிவகார்த்திகேயன் உடன் நகைச்சுவை கூட்டணி அமைத்திருக்கிறார். ‘டான்’ படத்தில் தான் நடிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து முழுக்க ஆங்கிலத்தில் ட்வீட் செய்திருக்கிறார் சூரி. அதைப்பார்த்து  சிவகார்த்திகேயன், நகைச்சுவையாக முதலில் ட்வீட்டை படிங்க,முழுக்க எழுத்துப் பிழை என குறிப்பிட்டார்.
  • மேலும் ரஜினி முருகன், நம்ம வீட்டுப் பிள்ளை ஆகிய இரண்டு படங்களில் சிவகார்த்திகேயன் உடன் நடித்திருந்த சமுத்திரக்கனி இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளார் என்று படக்குழு தெரிவித்துள்ளது `.
Share This Article
Exit mobile version