ஆபத்தான விண்கல் பூமியை நெருங்குகிறது

Vijaykumar 4 Views
1 Min Read
  • ஏற்கெனவே இந்தாண்டில் சில விண்கற்கள் பூமிக்கு அருகே கடந்து சென்றுள்ளன. இந்த ஆண்டிலேயே பூமி சந்திக்கவிருந்த மிகப்பெரிய விண்கல் இன்று பூமிக்கு மிக மிக அருகில் வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துஉள்ளனர்.

  • இது சூரிய குடும்பம் உருவானபோதே உருவாகியது விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
  • இந்த ராட்சத விண்கல் பூமிக்கு அருகே வந்தாலும் கூட அடுத்த பல நூற்றாண்டுகளிலும் பூமியுடன் மோதுவதற்கு வாய்ப்பு இல்லை என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
  • இந்த ராட்சத விண்கல் அதிகபட்சமாக பூமிக்கு 20 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நெருங்கி வரும் என நாசா தெரிவித்துள்ளது.
  • இது சற்று தொலைவுதான் இதுபோன்ற மிகப்பெரிய ஆபத்தான ராட்சத விண்கல்லுக்கு போதிய அளவுக்கு நெருக்கம்தான்.
  • இந்த ராட்சத விண்கல் பூமிக்கு அருகே மணிக்கு 124,000 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து செல்லும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
  • 20 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் விட்டம் 900 மீட்டர் (3000 அடி).
Share This Article
Exit mobile version