மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றான ரேஷன் கார்டு மூலம் மக்கள் அதிக அளவில் பயனடைந்து வருகின்றனர். ரேஷன் கார்டு தற்போது ஸ்மார்ட் கார்டு அக மாறியுள்ளது. இதன் மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை குறைவான விலையில் பெற்று கொள்கின்றனர்.
கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் ரேஷன் கார்டு மூலம் பல்வேறு சலுகைகளை வழகியுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு போதுமான சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல், கிருமி நசுனி கொண்டு கை கழுவுதல் போன்ற நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.
ரேஷன் கடைகளில் உணவு பொருட்களை வாங்க குடும்ப தலைவர் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். இதனால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது ரேஷன் கடைகளில் உணவு பொருட்களை வாங்க கைரேகை வைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் கைரேகை இயந்திரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கைரேகை இடுகின்றனர். அதில் கிருமி நசுனி கூட தெளிப்பது இல்லை.
கொரோனா வைரஸ் உள்ள ஒருவர் இயந்திரத்தில் கைரேகையை செலுத்தினால் கூட கொரோனா அனைவருக்கு பரவி விடும். COVID -19 தொற்று முழுமையாக சரி ஆகும் வரை கைரேகை பதிவு செய்வதை நிறுத்தி வைக்கவேண்டும். இல்லையென்றால் கிருமி நசுனி பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.