‘தாதா சாகேப் பால்கே’ இந்த விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு. இந்தியத் திரைப்படத் துறையில் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதாகும்.

நடிகர் ரஜினிகாந்த் இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர். ரஜினிகாந்த் அவருக்கு 70 வயது ஆகிறது. அவருடைய கலைச்சேவையை கவுரவப்படுத்தும் வகையில் மத்திய அரசு அவருக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று ட்வீட்டில் வெளியிட்ட செய்தி

“ரஜினிகாந்த் இந்தியத் திரையுலக வரலாற்றில் மிகசிறந்த நடிகர். இவருக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார். நடிகர், கதாசிரியர், தயாரிப்பாளராக அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நடுவர்களாக இருந்த மோகன்லால், சுபாஷ்கை, சங்கர், ஆஷா போன்ஸ்லே, பிஸ்வஜித் சாட்டர்ஜி ஆகியோருக்கு நன்றி” என்று பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

“தாதா சாகேப் பால்கே” இந்த உயரிய விருதினை பெற்ற பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், எல்.வி.பிரசாத், நாகி ரெட்டி, திலீப்குமார், சசிகபூர், வினோத் கன்னா, உள்ளிட்டோர் இந்த உயரிய விருதைப் பெற்றுள்ளனர். தமிழகத்தில் இந்த விருதினை பெற்ற நடிகர்கள் நடிகர்திலகம் சிவாஜி கணேசன்(1996), இயக்குநர் பாலசந்தர் (2010) ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அவர்களைத் தொடர்ந்து ரஜினிகாந்துக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தை “தாதா சாகேப் பால்கே” விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ரஜினியின் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். மேலும், பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன.