கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சீரக தேநீர்!

Selvasanshi 2 Views
1 Min Read

இந்த கொரோனா காலத்தில் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்தால், நாம் ஆரோக்கியமாக இருக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி நிறைந்த உணவுகளை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அந்தவகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சிறந்த சீரக தேநீர் பானம் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் எடுத்து கொண்டு அதை கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதி நிலைக்கு வந்தவுடன் அதில், பெருஞ்சீரகம் விதைகள் 1/2 தேக்கரண்டி, சீரகம் 1/2 தேக்கரண்டி, இஞ்சி 1/2 அங்குலம் சேர்த்து மூடி போட்டு 8 அல்லது 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும். பின்னர், இதை வடிகட்டி, அதில் சுவைக்கு ஏற்ப தேன் கலக்கவும். இப்போது சூடான சுவையான சீரக தேநீர் தயார். இந்த தேநீரை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகளவு உள்ளது. வைட்டமின் சி உள்ள பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் முருங்கை கீரையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகளவு உள்ளது. நெல்லிக்காயுடன் முருங்கை இலை இணையும் போது, இது நம் உடலில் இரும்பு உறிஞ்சுதலை அதிகரிக்கும். முருங்கை கீரைக்கு பதிலாக புதினா அல்லது கொத்தமல்லி சேர்த்துக் கொண்டாலும் நல்லது தான்.

Share This Article
Exit mobile version