கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிடி ஸ்கேன் எடுக்கலாமா?

Selvasanshi 3 Views
4 Min Read

ஹைலைட்ஸ்:

  • சிடி ஸ்கேன் எடுப்பதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • செல்ப் சிடி-ஸ்கேன் எடுப்பது ஆபத்தானது.
  • குழந்தைகளுக்கு சிடி-ஸ்கேன் எடுப்பதற்கு அனுமதி அளிப்பதில்லை.

கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிடி ஸ்கேன் எடுப்பதால், அவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா கூறிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் பலரும் சிடி ஸ்கேன் எடுத்துள்ளார்கள். இந்நிலையில் குலேரியாவின் கருத்து அச்சத்தை ஏற்பட்டுள்ளது.

சிடி ஸ்கேன் எடுத்தவர்கள் ஒவ்வொருவருக்கும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது என்று சொல்ல முடியாது என்கிறார் அமர்நாத். மேலும் புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கு, அவர்களின் பாதிப்பு எவ்வளவு, முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்று கண்டறிய சிடி ஸ்கேன் எடுக்க வேண்டியுள்ளது என்கிறார் அமர்நாத்.

பொதுவாக குழந்தைகளுக்கு சிடி-ஸ்கேன் எடுப்பதற்கு அனுமதி அளிப்பதில்லை. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு சிடி-ஸ்கேன் எடுப்பதன் மூலம் அவர்களுக்கு உடனே தீவிரமான சிகிச்சை தேவையா, இல்லையா என்பதை கண்டறியலாம். மிதமான பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெறலாம். தொடர்ந்து சிடி ஸ்கேன் எடுப்பதற்கு எந்த மருத்துவரும் பரிந்துரை செய்வதில்லை.

கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் சிலருக்கு நெகடிவ் என்ற முடிவு வந்தாலும், கொரோனா அறிகுறிகள் நீடிக்கின்றன. இச்சுழலில் கொரோனா தொற்று பாதிப்பு உண்மையில் இருக்கிறதா என கண்டறிய சிடி-ஸ்கேன் எடுக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஆர்டிபிசிஆர் சோதனையில் கொரோனா உறுதியாகாத நிலையில், மருத்துவர்கள் சிடி-ஸ்கேன் எடுப்பதற்கு பரிந்துரை செய்கிறார்கள். கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் சிடி-ஸ்கேன் பற்றி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா பேசியதற்கு வேறு காரணங்களும் உள்ளன என்கிறார்கள்.

சிடி ஸ்கேன் யார் எடுக்கவேண்டும் என்பதை விளக்குக்கிறார் மருத்துவர் புகழேந்தி.

கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், பல தனியார் மருத்துவமனைகளில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களை உடனே சிடி ஸ்கேன் எடுக்கச் சொல்கிறார்கள். அவர்களுக்கு பாதிப்பு குறைந்த பிறகும் சிடி ஸ்கேன் எடுக்கச் சொல்கிறார்கள்.

கடந்த ஒரு வருடமாக பணம் கொழிக்கும் இடமாக மாறிவிட்டது சிடி ஸ்கேன் மையங்கள். அடிக்கடி சிடி-ஸ்கேன் எடுப்பதால் அதிகப்படியான கதிர்வீச்சு நம் உடலில் பாய்ந்து புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. குறைவான கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள சிடி-ஸ்கேன் எடுப்பதை தவிர்ப்பது நல்லது என்கிறார் மருத்துவர் புகழேந்தி.

அதிகமாக மூச்சுதிணறல் ஏற்பட்டால், மருந்துகள் எடுத்துக்கொண்ட பிறகும் இந்த பிரச்னை தொடர்ந்தால் சிடி ஸ்கேன் எடுக்கலாம். மேலும் ஆக்சிஜன் செறிவு நிலை குறைவாக உள்ளவர்களுக்கும் சிடி ஸ்கேன் பரிந்துரை செய்யப்படுகிறது.

கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை எடுத்து கொண்ட பிறகும், அவருக்கு எந்த முன்னேற்றம் ஏற்படவில்லை மேலும் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தொடர்ந்து நீடிக்கிறது என்றால் சிடி ஸ்கேன் எடுக்கலாம்.

செல்ப் ஸ்கேன் எடுப்பது ஆபத்தானது.

தமிழகத்தின் முதன்மையான அரசு மருத்துவமனை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நுற்றுக்கணக்கானோர் தனியார் ஸ்கேன் மையங்களில் எடுக்கப்பட்ட ஸ்கேன் அறிக்கையை கொண்டு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கமாறு கூறுகிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் டீன் தேரணிராஜன் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

ராஜிவ் காந்தி மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 50 பேராவது சிடி ஸ்கேன் அறிக்கையை கொண்டு வந்து உடனே உள்நோயாளியாக அனுமதியுங்கள் என்று கேட்கிறார்கள். இவர்கள் தனியார் ஸ்கேன் மையங்களில் செல்ப் என்று சொல்லி ஸ்கேன் எடுத்ததாக சொல்கிறார்கள். கொரோனா பதிப்பு அதிகம் உள்ளவர்களுக்குதான் இங்கு சிகிச்சை தரமுடியும். பதிப்பு குறைவாக உள்ளவர்கள் வீட்டில் இருந்து சிகிச்சை எடுத்து கொள்ளலாம். செல்ப் சிடி-ஸ்கேன் எடுப்பது ஆபத்தானது என்று கூறுகிறார் தேரணிராஜன்.

சிடி ஸ்கேன் பற்றி குலேரியா பேசியது ஏன்?

லேசான கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் சிடி-ஸ்கேன் எடுத்தால் கடுமையான பக்க விளைவுகளுக்கு ஆளாவார்கள் என்று எய்ம்ஸ் இயக்குநர் மருத்துவர் ரண்தீப் குலேரியா எச்சரித்து இருந்தார்.

சிடி ஸ்கேன் பற்றிய விவரங்களை சேகரித்து கொண்டு இருக்கும் போது குலேரியா இவ்வாறு பேசியிருப்பது மக்களுக்கிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சில மருத்துவர்கள் குலேரியா பேசியதற்காக காரணங்களையும் தெரிவித்து இருக்கிறார்கள். தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் கடுமையான சிக்கல்கள் நீடிக்கின்றன. கொரோனா பரிசோதனைக்காக மக்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே இருக்கிறது. கொரோனாவுக்கான ஆர்டிபிசிஆர் சோதனை முடிவுகள் வர மூன்று நாட்கள் ஆகின்றன.

சிடி ஸ்கேன் எடுத்தால் ஐந்து நிமிடத்தில் முடிவு தெரிந்துவிடும் என்று ஆயிரக்கணக்க மக்கள் சிடி ஸ்கேன் எடுக்க குவிகிறார்கள். இதனால் எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள தொற்று நோய் துறை மற்றும் ரேடியோலஜி துறைக்கும் பனிப்போர் நடக்கிறது.

குலேரியாவின் கருத்து மக்களுக்கு அச்சம் தந்தாலும், மக்கள் கூட்டம் ஓரளவுவாது குறையும் என்று எதிர்பார்த்து குலேரியா இவ்வாறு சொல்லியிருக்கிறார்.

 

Share This Article
Exit mobile version