CSK அணி இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்

Pradeepa 7 Views
1 Min Read

ஐபிஎல் இரண்டாவது லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் விளையாட உள்ளது. முதல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்த்து போட்டியிட்ட சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது.

ஐபிஎல் நிர்வாகம் முதல் போட்டியில் தோனிக்கு அபராதம் விதித்தது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் , “மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனின் இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி காலதாமதமாக ஓவர்கள் வீசியதால் அணிக் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு ஐபிஎல் விதிகளின்படி 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

இது இந்த சீசனில் ஏற்பட்ட முதல் தவறு என்பதால் வெறும் அபராதம் மட்டும் விதிக்கப்படும், இதே தவறு மீண்டும் தொடர்ந்தால் கேப்டன் தோனிக்கு இரண்டு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் விதியின் படி 90 நிமிடத்தில் 20 ஓவர்கள் கொண்ட ஒரு இன்னிங்ஸை முடிக்க வேண்டும். ஒரு மணி நேரத்தில 14.1 ஓவர்கள் வீசி முடிக்க வேண்டும். 90ஆவது நிமிடத்தில் 20ஆவது ஓவரை துவங்கவேண்டும். ஐபிஎல் விதியை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் விளையாட உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 

ருதுராஜ் கெய்க்வாட் / ரோபின் உத்தப்பா, ஃபாஃப் டூ பிளஸி, மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, மகேந்திரசிங் தோனி, சாம் கரன், டுவைன் பிராவோ, ஷார்துல் தாகூர், தீபக் சாஹர்.

பஞ்சாப் கிங்ஸ் அணி 

மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா, கே.எல்.ராகுல், நிகோலஸ் பூரன், ஷாருக்கான், ஜெய் ரிச்சர்ட்சன், முருகன் அஸ்வின், ரிலி மெரிடித், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

Share This Article
Exit mobile version