Contact Information

Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York

We Are Available 24/ 7. Call Now.

ஒரு வ‌ய‌திற்குட்ப‌ட்ட‌ குழந்தைகளால் பசும் பாலை செரிக்க முடியாது. ஏன்னென்றால் பசும்பாலில் புரோட்டீனும், தாதுக்களும் அதிக அளவு உள்ளது. பசும்பாலில் உள்ள புரோட்டீனையை செரிக்கும் தன்மை குழந்தைகளுக்கு இருக்காது.

பொதுவாக ஒரு வயது வரை குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் போதிய அளவு வளர்ச்சி அடையாது. அந்த நேரங்களில் குழந்தைகளுக்கு எவ்வளவு சத்துகள் தேவை என்பதை அறிந்து சரியான முறையில் உணவுகளை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

குழந்தையின் வளர்ச்சிக்கு தாய்ப்பாலை விட சிறந்த உணவு வேறேதுவும் இல்லை என்றே கூறலாம். பசும்பாலில் போதுமான அளவு சத்துகள் இல்லை. பசும்பாலின் ஜீரணத் தன்மையும் மாறுபடும். பசும்பாலால் ‘கௌஸ் மில்க் புரோட்டின் அலர்ஜி’ என்ற பிரச்சனை ஏற்படும்.

குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பதால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?

வைட்டமின் சி, இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் பசும்பாலில் சரியான அளவில் இருப்பதில்லை. இதனால் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து குறைபாடு ஏற்படும்.

பசும்பாலில் உள்ள புரோட்டீன் குழந்தையின் செரிமான மண்டலத்தைப் பாதிக்கும். செரிமான பாதிப்பால் சில குழந்தைகளுக்கு மலத்தில் இரத்தம் சேர்ந்து வெளியேறும். மேலும் இதனால் குழந்தைகளுக்கு சிறுநீரக பாதிப்புகள் கூட ஏற்படும். சில குழந்தைகளுக்கு வாந்தி வயிற்றுபோக்கு பிரச்சனைகளும் வரக்கூடும்.

பசும்பாலில் இருக்கும் விலங்கின புரோட்டீன் சிறிய குழந்தைகளின் உடல்நிலைக்கு ஏற்றதல்ல. 6 மாதம் முதல் 12 மாத வரை குழந்தைகளுக்கு அதிக அளவில் இரும்புச்சத்து தேவை. குழந்தைக்கு தேவையான இரும்புச்சத்து பசும்பால் குடிக்கும் குழந்தையின் உடலில் சேராமல் தடைப்படும்.

குழந்தைகளுக்கு அன்றாடம் கொடுக்கும் காய்கறி மற்றும் பழம், கீரைகள் மூலம் கிடைக்கும் சத்துகள், அசைவ உணவுகள் மூலம் கிடைக்கும் சத்துகள் போன்றவை உடலில் சேராமல் பசும்பால் தடுத்துவிடும். இதனால் இரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாடு, இரும்புச்சத்து குறைபாடு ஆகியவை ஏற்படும்.

ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கலாம். பசும்பாலில் கால்சியம், புரதம், வைட்டமின் டி ஆகியவை எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது ஒன்றரை கப் அளவுக்கு மட்டுமே பசும்பால் கொடுக்க வேண்டும். பசும்பால் பிடிக்காத குழந்தைகளுக்கு மோர், யோகர்ட், தயிர், சீஸ் கொடுக்கலாம்.

ஒரு குழந்தைக்கு அதிக அளவு, அதாவது 3-4 கப் அளவுக்கு பசும்பால் தரக்கூடாது. பசும்பால் கொடுக்க தொடங்கிய பின் குழந்தையின் மலம் கழிக்கும் பழக்கத்தில் சிறிய மாற்றங்கள் ஏற்படும் அதாவது மலம் கழிக்க கொஞ்சம் சிரமப்படுவார்கள். அதனால் பாலாக ஒரு டம்ளர் அளவுக்குக் மட்டும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு பசும்பாலை யோகர்ட், தயிர், மில்க் ஷேக், சீஸ் ஆக மாற்றி கொடுப்பது மிகவும் நல்லது.

Share: