- Advertisement -
Homeசெய்திகள்வீட்டில் இருந்தபடியே கொரோனவை கண்டறியும் கருவி - ஐசிஎம்ஆர் அனுமதி

வீட்டில் இருந்தபடியே கொரோனவை கண்டறியும் கருவி – ஐசிஎம்ஆர் அனுமதி

- Advertisement -spot_img

19 ஆம் தேதி முதல் வீட்டில் இருந்தபடியே கொரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்யும் ரேபிட் டெஸ்ட் பரிசோதனை கருவியை பயன்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்யும் கருவியை மகாராஷ்டிரம் மாநிலம் புனேவைச் சேர்ந்த மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்த பரிசோதனை கருவின் விலை ரூ. 250.

CORONA 2

மூக்கில் உள்ள சளி மாதிரியை எடுத்து கொரோனா தொற்று இருப்பதை வீட்டிலேயே உறுதி செய்து கொள்ளலாம். இந்த பரிசோதனையை எல்லோரும் செய்ய கூடாது. பரிசோதனை செய்த 15 நிமிடத்தில் தொற்று இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் இருந்தவர்கள் மட்டும் இந்த கருவியை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரேபிட் டெஸ்ட் பரிசோதனை கருவியின் மூலம் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தால் அது உறுதியாக பாசிட்டிவ் என்றே கருதப்படும் அவர்கள் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய தேவையில்லை. சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அறிவுரையின் படி வீட்டு தனிமை மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்து இந்த கருவி மூலம் சோதனை செய்து அதில் நெகட்டிவ் என வந்தால் தற்போது வழக்கமாக செய்யப்படும் ஆர்டிபிசிஆர் சோதனையை செய்து கொள்ள வேண்டும். ஐசிஎம்ஆர் இந்த பரிசோதனையை செய்வதற்கு வசதியாக மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img