ஹைலைட்ஸ்:
- 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வரும் மே மாதம் 1ஆம் தேதியிலிருந்து கொரோனா தடுப்பூசி.
- இன்று மாலை 4 மணி முதல் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம்.
- ஒரு செல்போன் நம்பரை பயன்படுத்தி நான்கு பேருக்கு முன்பதிவு செய்யலாம்.
18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வரும் மே மாதம் 1ஆம் தேதியிலிருந்து கொரோனா தடுப்பூசி செலுத்துவதாக மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இதைத்தெடர்ந்து தற்போது 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இன்று மாலை 4 மணி முதல் அரசின் இணைத்தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி மையங்களில் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கூட்டம் கூட வாய்ப்புள்ளது. தடுப்பூசி மையங்களில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்க்காக மத்திய அரசு கொரோனா தடுப்பூசி முன்பதிவு செய்ய COWIN என்ற இணைத்தளத்தையும், ஆரோக்ய சேது செயலியையும் அறிமுகப்படுத்தி உள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள COWIN என்ற இணைத்தளத்தில் முன்பதிவு செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.
கொரோனா தடுப்பூசி முன்பதிவு செய்வதற்காக ஏராளமானோர் நள்ளிரவு 12மணி முதல் முயற்சித்து வருகிறார்கள். ஆனால் தற்போது 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இன்று மாலை 4 மணி முதல் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் முன்பதிவு செய்யலாம் என மத்திய அரசு கூறியிருக்கிறது.
மேலும் அரசுகளிடம் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கையை பொறுத்து பயனாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
தற்போது 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் www.CoWin.gov.in/home என்ற இணையதளத்தில் கொரோனா தடுப்பூசி முன் பதிவு செய்துகொள்ளலாம். முக்கியமாக கொரோனா தடுப்பூசி முன்பதிவுக்கு புகைப்படத்துடன் கூடிய ஒரு அடையாள அட்டை தேவைப்படுகிறது.
செல்போன் மூலமும் கொரோனா தடுப்பூசி முன்பதிவு செய்து கொள்ளலாம். ஒரு செல்போன் நம்பரை பயன்படுத்தி நான்கு பேருக்கு முன்பதிவு செய்யலாம். மேலும் இதற்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனி புகைப்பட அடையாள அட்டைகள் வேண்டும். கொரோனா தடுப்பூசி முன்பதிவு செய்யும்போது அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு தடுப்பூசி மையத்தை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.