ஹைலைட்ஸ்:
- ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கால், கொரோனா ஏற்றத்தின் வேகம் சற்று குறைந்துள்ளது.
- சில நாட்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம்.
- ரெம்டெசிவர் மருந்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு தினங்களாக கொரோனா பரவல் வேகம் சற்று குறைந்துள்ளதாக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். இது தமிழக மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
சென்னை, தண்டையார் பேட்டையில் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியது , ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கால், கடந்த இரண்டு நாட்களாக கொரோனா ஏற்றத்தின் வேகம் சற்று குறைந்துள்ளதாக கூறினார்.
மேலும் அடுத்த சில நாட்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம். மாஸ்க் போடாமல் வெளியே வராதீர்கள் என்றும் கூறினார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை மக்கள் குறைத்து கொள்ளவேண்டும். தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுககளை முழுமையாக கடைப்பிடித்தால் கொரோனாவை முழுமையாக குறைந்துவிடலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார்.
தற்போது கொரோனா பரிசோதனை குறைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கும் அவர் பதில் அளித்தார். தமிழகத்தில் நாள்தோறும் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார்.
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனா பரவல் குறைவாக இருப்பதாக நினைத்துக் கொண்டு மக்கள் வெளியே வரவேண்டாம். வீட்டில் யாருக்காவது கொரோனா பாதிப்பு இருந்தால், வீட்டில் உள்ள அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும். மேலும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மேலும், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி வீணாவதை 5% குறைத்துள்ளோம். ரெம்டெசிவர் மருந்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான சிறப்பு மையங்கள் விரிவுப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.