கொரோனா நோயாளி மருத்துவமனையில் இருந்தவர்கள் மீது எச்சிலை துப்பிவிட்டு தப்பி ஓட்டம்.

1 Min Read

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவாமனை தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை சில கொரோனா நோயாளிகள் மிகவும் அலட்சிய படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த கண்ணன் என்ற 32 வயது வாலிபர் நேற்று கொரோனா பரிசோதனை செய்து இருக்கிறார்.அவருக்கு காய்ச்சல் மற்றும் நோய் தொற்று அறிகுறி இருந்தததால் உடனடியாக அங்குள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

எனக்கு பரிசோதனை முடிவு வரும் முன்னரே ஏன் என்னை கொரோனா வார்டில் சேர்த்தீர்கள், என்று கூறி அந்த வாலிபர் மருத்துவமனை பணியாளர்களுடன் தகராறில் ஈடுப்பட்டு உள்ளார். இரவில் உணவு வழங்கிய போது உணவு வழங்கியவர்களுடன் தகராறு செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி அங்கு இருந்த கதவின் கண்ணாடியை உடைத்து, பின் கதவை திறந்து வெளியே வந்து, மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை ஒருமையில் திட்டி இருக்கிறார். மேலும் முக காவசத்தை கழற்றி விட்டு, எதிரில் இருந்தவர்கள் மீது எச்சிலை துப்பி தகராறில் ஈடுபட்டு இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து இரவு பணியில் இருக்கும் டாக்டர் அவரிடம் பேச முயற்பட்ட போது அவரையும் தாக்க முயற்சித்து இருக்கிறார். பின்னர் அவர் ஆஸ்பத்திரிக்கு தனது மனைவியை வரவழைத்து அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டார். மருத்துவமனையில் ஊழியர்கள் அவருடன் சமரசம் பேச முயன்றார்கள் அதை அவர் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார்.

அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க தலைமை மருத்துவர் சேகர் அந்த குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கவிட்டால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவருக்கு அறிவுரை கூறினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Exit mobile version