மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உலக வங்கிக் குழுத் தலைவர் டேவிட் மால்பாஸ் இடையே ஆன சந்திப்பு காணொலி வழியாக ஏப்ரல்13 ஆம் தேதி நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில், பெரிய அளவில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டாம் என்பது குறித்து அரசு தெளிவாக உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை முழுவதுமாக முடக்க இந்திய அரசுக்கு விருப்பம் இல்லை.
மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவதற்கு பதிலாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் அல்லது அவர்களுடைய குடும்பத்தினரை தனிமைப்படுத்துவதன் மூலம் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை எதிா்கொள்ளப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த காணொலி சந்திப்பின்போது கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு மேற்கொண்டு உள்ள நடவடிக்கைகள், இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பு தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.