நாட்டில் கடந்த 5-நாட்களாக குறைந்து வரும் கொரோனா நோய் தொற்று பாதிப்பு..!

Selvasanshi 3 Views
1 Min Read

நாட்டில் கடந்த 5-நாட்களாக கொரோனா நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்று 1.50 லட்சத்திற்கும் குறைவான அளவில் கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இதனால், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 45 நாட்களுக்கு பிறகு இன்று 20 லட்சத்துக்கு கீழ் குறைந்துள்ளது.

அதன்படி, 17,93,645 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 5 நாட்களாக நாட்டில் கொரோனா தொற்று 1.50 லட்சத்திற்கும் குறைவான அளவில் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,32,788 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 3,207 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,35,102-ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 20-வது நாளாக, தினசரி புதிய பாதிப்புகளைவிட, குணமடைபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,31,456 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்கள். கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 2,61,79,085 -ஆக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 20,19,773 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் மொத்தம் 35,00,57,330 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவில் இதுவரை 21,85,46,667 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, இது நாட்டின் புதிய மைல்கல் சாதனை என்று கூறியுள்ளது.

Share This Article
Exit mobile version