தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை தாண்டியுள்ளது!

Selvasanshi 2 Views
2 Min Read

ஹைலைட்ஸ் :

  • தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 706 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
  • சென்னையில் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 247 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
  • கொரோனா நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டு இருக்கிறது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் உயிரிழப்புகள் அதிகமாகி வருகிறது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 706 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 33 ஆயிரத்து 181 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதுள்ளது. புதிய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 247 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால் சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 146 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 41 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 3,166 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 1,835 பேருக்கும், மதுரை மாவட்டத்தில் 1,095 பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,030 பேருக்கும், திருச்சி மாவட்டத்தில் 1,569 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கிடையே கொரோனா நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 21 ஆயிரத்து 317 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்கள்.

அதே சமயத்தில், எவ்வித இணை நோய் ஏதுமின்றி 84 பேர் உள்ளிட்ட 311 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது. மேலும் நாடு முழுவதும் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதுவரை 18,29,26,460 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Exit mobile version