இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று ஒரேநாளில் மூன்று லட்சத்தை தாண்டியது.

Selvasanshi 3 Views
1 Min Read

ஹைலைட்ஸ்:

  • ஒரேநாளில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.
  • இந்தியாவில் நேற்று ஒரேநாளில் கொரோனாவால் 2,104 பேர் உயிரிழப்பு.
  • தற்போது மருத்துவமனைகளில் படுக்கைகள் கூட இல்லாத சூழ்நிலை.

நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக கொரோனா நோய் தெற்று அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 பேருக்கு கொரோ னா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் இந்தியாவில் மூன்று லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாவது இதுவே முதல்முறையாகும்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்தமாக எண்ணிக்கை 15,930,965 ஆக உயர்ந்துள்ளது. அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.

நேற்று ஒரேநாளில் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் 62 ஆயிரத்து 97 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதேப்போல் உத்தரப்பிரதேச மாநிலத்திலும் 33 ஆயிரத்து 214 பேருக்கு கொரோனா நோய் தெற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைநகர் டெல்லியில் 28 ஆயிரத்து 395 பேருக்கு கொரோனா நோய் தெற்று கண்டறியப்பட்டுள்ளது .

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் கொரோனாவால் மொத்தம் 2,104 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,84,657 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 1,34,54,880 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.மேலும் 22,91,428 பேர் கொரோனாவுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள டெல்லி, மும்பை, அகமதாபாத், லக்னோ, போபால், கொல்கத்தா, அலகாபாத் மற்றும் சூரத் ஆகிய நகரங்களில் தற்போது மருத்துவமனை படுக்கைகள் கூட இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Share This Article
Exit mobile version