12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வின் போது பின்பற்ற வேண்டிய கொரோனா வழிமுறைகள் வெளியீடு..

Selvasanshi 1 View
1 Min Read

தமிழகத்தில் விரைவில் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு நடைபெற உள்ள நிலையில்,கொரோனா நோய் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வின்போது பின்பற்ற வேண்டிய கொரோனா வழிமுறைகள் பற்றி தேர்வு துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

தமிழ் நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது.

தற்போது கொரோனா நோய் தொற்று அதிகரிப்பு காரணமாக கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதனால் திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு நடைபெறுமா என்ற சந்தேகம் பெற்றோர் மத்தியில் எழுந்து உள்ளது. மேலும் பிளஸ் 2 மாணவர்களும் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளார்கள்.

இச்சூழலில், விரைவில் நடைபெறவுள்ள 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி,

  • செய்முறைத் தேர்வில் போது ஆய்வகத்தில் எரியும் தன்மை உள்ள பொருட்களின் அருகில் கிருமி நாசினிகளை வைக்க கூடாது.
  • ஆசிரியர்களும், மாணவர்களும் செய்முறைத் தேர்வின் போது கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும்.
  • பள்ளிகள் நோய்க் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்தால் வேறு பள்ளிகளில் செய்முறைத் தேர்வை நடத்தலாம் .
  • கொரோனா பாதிப்பு , அறிகுறி உள்ளவர்கள் குணமடைந்த பிறகு அவர்களுக்கு தனியாக செய்முறை தேர்வை நடத்தலாம் .

என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Share This Article
Exit mobile version