3.42 இருந்து 26.6 விழுக்காடாக அதிகரித்த கொரோனா பரவல்

Vijaykumar 2 Views
1 Min Read

ஹைலைட்ஸ் :

  • 3.42 இருந்து 26.6 விழுக்காடாக அதிகரித்த கொரோனா பரவல்
  •  ஒரு நாளைக்கு சென்னையில் சராசரியாக 7000 பேருக்கு தொற்று உறுதியாகி வருகிறது
  •  ஒரு நாளைக்கு சுமார் 50,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்

மார்ச் முதல் வாரத்தில் 3.42 விழுக்காடாக சென்னையிள் கொரோனா பரவல் இருந்தது. தற்போது தொற்றுப் பரவல் 26.6 விழுக்காடாக அதிகரித்து உள்ளது

ஒரு நாளிக்கு எத்தனை பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறதோ,அதில் எத்தனை பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது என்பதை அறிந்து அதன் மூலம் தொற்று விகிதம் கணக்கிடப்படுகிறது.

கடந்த மார்ச் 11 ஆம் தேதி 11,523 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 395 பேருக்கு தொற்று உறுதியானது. அன்று தொற்று பரவல் விகிதம் 3.42 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை ஏப்ரல் மாதம் தொடர்ந்து அதிகரித்து தற்போது 26.6 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஒரு நாளைக்கு 100 பேருக்கு பரிசோதனை செய்தல் அதில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது .

தற்போது ஒரு நாளைக்கு சென்னையில் சராசரியாக 7000 பேருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. ஆனால் ஒரு நாளில் பரிசோதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 35,000 ஐ கூட தாண்டவில்லை.

இதுவரைக்கும் சென்னையில் ஒரே நாளில் அதிகபட்சமாக 33,500 பேர் மட்டுமே பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்தல் மட்டுமே தொற்று பரவல் விழுக்காடும் குறையும் என்று தொற்று நோய் நிபுணர்கள் கூறுகின்றனர்.

சென்னையில் ஒரு நாளைக்கு சுமார் 50,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Share This Article
Exit mobile version