மூன்று மாதங்களுக்குப் பிறகு சமையல் எரிவாயு விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக இல்லதரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி மற்றும் 16ஆம் தேதி என இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது.
கடந்த டிசம்பர் 1ஆம் தேதியன்று 610 ரூபாயாக இருந்த சமையல் எரிவாயு விலை அடுத்தடுத்த உயர்த்தப்பட்டது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல் எரிவாயு விலை 100 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியதை அடுத்து மார்ச் 16 ஆம் தேதி வீட்டில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவின் விலையை 10 ரூபாய் குறைத்து 825 ரூபாய்க்கு விற்கப்படும் என எண்ணை நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டனர்.
இதனை தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக சமையல் எரிவாயு விலை உயர்ந்த படாமலேயே இருந்தது. இந்த நிலையில் தற்போது வர்த்தகம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் அதிகரித்து 850 ரூபாய் 50 காசுகள் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வர்த்தக சிலிண்டருக்கான விலை 84 ரூபாய் 50 காசுகள் அதிகரித்து ஆயிரத்து 687 ரூபாய் 50 காசுகள் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.