காங்கிரஸ் தேர்தல் அறிக்கை – அழகிரி

Pradeepa 1 View
3 Min Read

சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 26 தலைப்புகள் உள்ள, காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழகிரி கூறுகையில், ”காங்கிரசின் எண்ணங்களை, தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு உள்ளோம். இந்த அறிக்கையில் அரசு எப்படி நடைபெற வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளும் உள்ளன,” என்று கூறினார்.

தேர்தல் அறிக்கை

  • அரசின் சேவைகள் அனைத்தும், மொபைல் போன் வாயிலாக வழங்கப்பட்டு, பொது மக்கள், அரசு அலுவலகங்களில் காத்து கிடக்கிற சிரமங்களையும், காலதாமதம் ஆவது குறைக்கப்படும்.
  • தேர்தல் நடத்தப்படாத, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தேர்தல் நடத்தப்படும்.
  • தமிழக்தில் திறமையும், வலிமையும், அர்ப்பணிப்பும் உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  • அரசு பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே 74 சதவீதம் ஒதுக்க தனிச் சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் துவங்க முனைவோருக்கு, நிலம், மின்சாரம் போன்ற தொழில் ஆதார தேவைகளை பூர்த்தி செய்ய, விலையில் சலுகை மற்றும் கட்டணத்தில் மானியமும் வழங்கப்படும்.
  • ஆண்டுகளுக்கு வரி விடுமுறை வழங்கப்படும்.
  • பூரண மதுவிலக்கு அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவும், கள்ளச்சாராயம் பெருகாமல் தடுக்கவும், வருவாய் இழப்பை தடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆராய, நிபுணர்கள், அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழு அமைக்கப்படும்.
  • மாநகரங்களில் மகளிர் மற்றும் மாணவர்களுக்கான சிறப்பு பஸ்கள் வழங்குவதோடு, மாற்றுத் திறனாளிகளுக்கு தனி வசதிகள் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
  • போக்குவரத்து கட்டணங்கள் சீரமைக்கப்பட்டு, தமிழகம் முழுதும் பயண துாரத்தின் அடிப்படையில் தகுந்த கட்டணம் வசூலிக்கப்படும்.
  • பெண்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் சம உரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துக்களுக்கு, மத்திய அரசு வசூலிக்கும் பத்திரப்பதிவு கட்டணம், 7 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும்; மாநில அரசின் பதிவு கட்டணம், 4 சதவீதத்தில் இருந்து, 2 சதவீதமாக குறைக்கப்படும்.
  • பிளஸ் 2 வரை கட்டாய கல்வி உரிமை சட்டத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • காய்கறி, பழங்கள், நிலக்கடலை, தானிய வகைகள், மஞ்சள் போன்ற பொருட்களுக்கும் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்படும்.
  • விவசாயிகள், தங்களுக்கு தேவைப்படும் மின்சாரத்தை சூரிய ஒளியின் மூலம் பெற ஏற்பாடு செய்ய மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும்.
  • 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை உள்ள கல்வி கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.
  • ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு பராமரிப்பு இல்லங்கள் உருவாக்கப்படும்.
  • நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாளை கலை எழுச்சி நாளாக கொண்டாட அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்படும்.
  • திரையரங்குகளில் நியாயமான கட்டணம் வசூலிக்க ஏற்பாடு செய்யப்படும்
  • அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முதியோர் நலன் மருத்துவ மையம் உருவாக்கப்படும்.
  • வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு இலவச அரிசியுடன் கூடிய முக்கிய மளிகை சாமான்களின் தொகுப்புகள் மாதந்தோறும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண சலுகை அளிக்கப்படும். குடியிருப்புகளில் சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்த மானியம் மற்றும் கடனுதவி அளிக்கப்படும்.
  • ஒவ்வொரு நகராட்சியிலும் குறைந்தது, 50 படுக்கைகளை கொண்ட பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும்.
  • காவல் நிலையத்தில் ஏற்படும் மரணங்களை தடுக்க சிறப்பு சட்டம் இயற்றப்படும்.
  • பணியின் போது பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கு உரிய நிவாரணமும்பணியின்போது இறக்க நேரிடும், பத்திரிகையாளர்களின் குடும்ப நிவாரண நிதியை உயர்த்தி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
Share This Article
Exit mobile version