- Advertisement -
Homeசினிமா'மாநாடு' திரைப்பட நடிகர் சிம்பு மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு வாழ்த்துக்கள்

‘மாநாடு’ திரைப்பட நடிகர் சிம்பு மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு வாழ்த்துக்கள்

- Advertisement -

கடந்த வாரம் வெளியான ‘கர்ணன்’ திரைப்படத்தை பிரபலங்களும், ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். முதல் நாள், முதல் காட்சி பார்த்த தனுஷ் ரசிகர்களோ, ‘இன்னொரு தேசிய விருதை தனுஷுக்கு எடுத்து வைங்கப்பா’ என சொல்லி மிரட்டி உள்ளனர். இந்நிலையில் தற்போது ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வரும் சிம்புவை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆஹா, ஓஹோ என புகழ்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

‘ஈஸ்வரன்’ திரைப்படத்திற்கு பின் சிம்புவின் கம்பேக் திரைப்படமாக ‘மாநாடு’ ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரில் இடம்பெற்ற சிம்புவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், சிம்பு பழையபடி மன்மதனாக மாறியுள்ளார் என்று இணையத்தில் டிரெண்ட் செய்து வந்தனர். நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தில் முதன்முறையாக அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக தோன்றுகிறார்.

இந்த திரைப்படத்தில் பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷனின் மகளான கல்யாணி சிம்புவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ஹீரோ’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இவர். இவர்களுடன் பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

அண்மையில் சென்னை EVP பிலிம் சிட்டியில் ‘மாநாடு’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அப்போது ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான நடிகர் சிம்புவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதனை தொடர்ந்து ‘மாநாடு’ படப்பிடிப்பு இடைவெளியில் நடிகர் சிம்பு மண்ணில் படுத்து ஓய்வெடுப்பதை போன்ற புகைப்படங்களை இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து Man of Simplicity என கூறியுள்ளார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘நான் பார்த்தவரையில் மாநாடு திரைப்படம் சிம்புவிற்கும், இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கும் ஒரு மைல்கல்லாக அமையும். இருவருக்கும், உடன் பணிபுரிந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்’ என்று பதிவு செய்துள்ளார். அவரின் இந்த பதிவை பார்த்த தனுஷ் ரசிகர்கள் ‘கர்ணன்’ திரைப்படம் வெளியாகியுள்ள சமயத்தில் வேண்டுமென்ற அவர் இந்த பதிவை ட்விட்டரில் போட்டுள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தில் தனுஷை சீண்டும் விதமாக நடிகர் சிம்பு ‘நீ அழிக்க வந்த அசுரன்னா, நான் காக்க வந்த ஈஸ்வரன்டா’ என வசனம் வைத்து பரபரப்பை உருவாக்கினார். இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்பு மற்றும் தனுஷ் இடையே உள்ள போட்டியை அதிகரிக்கும் விதமாகவே இந்த பதிவை போட்டுள்ளதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

 

 

- Advertisement -
- Advertisement -
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -
Related News
- Advertisement -