சுதந்திர தினத்தை முன்னிட்டு 33 பேருக்கு முதல்வரின் சிறப்புப் பதக்கம்..!

Selvasanshi 1 View
1 Min Read

சுதந்திர தினத்தை முன்னிட்டு 33 பேருக்கு முதல்வரின் சிறப்புப் பதக்க விருதுகள் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

75 -வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும், ரெயில் நிலையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிலையங்கள் உள்பட பல பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டையில் கொடி ஏற்ற உள்ளார். இதனால் அங்கு ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு நவீன சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு 33 பேருக்கு முதல்வரின் சிறப்பு பதக்க விருதுகள் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறையில் 9 பேருக்கு , காவல்துறையில் 3 பேருக்கு , தீயணைப்பு துறையில் 3 பேருக்கு முதல்வர் சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது.

நகராட்சி நிர்வாகத் துறையில் 6 பேருக்கு, வருவாய் பேரிடர் மேலாண்மை துறையில் 3 பேருக்கு முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது. மேலும் கூட்டுறவுத் துறையில் 3 பேருக்கு, ஊராட்சித் துறையில் 6 பேருக்கு முதல்வர் சிறப்புப் பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Exit mobile version