- Advertisement -
Homeசெய்திகள்3 மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் நாளை நேரில் ஆய்வு

3 மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் நாளை நேரில் ஆய்வு

- Advertisement -

கொரோனா நோய் தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கு அமலபடுத்தியும் கொரோனா தொற்றின் தாக்கம் குறையவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,059 ஆக உயர்ந்துள்ளது. மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 16,64,350 ஆக உள்ளது. நேற்று ஒரு நாளில் 364 பேர் கொரோனா தொற்றால் உயிர் இழந்துள்ள நிலையில் மொத்த உயிர் இழப்பு எண்ணிக்கை 18,329 ஆக உயர்ந்துள்ளது.

நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் மே 24 ஆம் தேதி வரை உள்ள கட்டுப்பாடுகளை தமிழக அரசு தீவிரமாகியுள்ளது. அத்தியாவசிய கடைகள் காலை 10.00 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தேவை இல்லாமல் சுற்றி திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக முதலவர் ஸ்டாலின் கொரோனா பரவல் குறித்து சேலம், ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மூன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -
- Advertisement -
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -
Related News
- Advertisement -