முதல்வர் ஸ்டாலின் தொண்டு நிறுவனங்களுடன் நாளை ஆலோசனை

1 Min Read

தமிழகத்தில் உள்ள மக்களை கொரோனா வைரஸ் அதிக அளவில் பாதித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகிறார்கள். இதில் சிலர் உயிர் இழந்து உள்ளனர். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தன்னார்வலர்கள் சிலர் கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • மக்களுக்கு இலவசமாக உணவு வழங்குவது,
  • நோயாளிகளை மருத்துவமனைகளில் கொண்டு சேர்ப்பது,
  • தேவைபபடுவோருக்கு மருந்துகள் வாங்கி கொடுப்பது

இது போன்ற பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை 5.00 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் 27 தொண்டு நிறுவனங்களுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், முக்கிய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

Share This Article
Exit mobile version