தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 5 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தொற்று அதிகம் பதிவான கோவை, ஈரோடு, சேலம், தஞ்சை, நாகை, உள்ளிட்ட 11 மாவட்டங்களில் குறைவான அளவில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த 11 மாவட்டங்களில் தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகளால் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு கூடுதல் தலைப்புகள் வழங்குவது உள்ளிட்டவை குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மற்றும் முக்கிய துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று ஆலோசனை நடத்துகிறார்.
தற்போது 27 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த ஆலோசனைக்கு பிறகு தோற்று அதிகமான மாவட்டங்களிலும் போக்குவரத்துக்கு அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.