கொரோனா நிதியாக ரூ.2000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

Pradeepa 1 View
2 Min Read

ஹைலைட்ஸ் :

  • ரேஷன் அட்டை தாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ. 4000 வழங்கும் திட்டம்.
  • தமிழகத்தில் உள்ள 2,07,66,950 அரிசி அட்டை தாரரக்ளுக்கு முதல் தவணை நிவாரண நிதியாக 2000 ரூபாய் வழங்குதல்.
  • இன்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும் இன்று முதல் வரும் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போலவே, ரேஷன் அட்டை தாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கும் திட்டத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் தனது முதல் கையெழுதிட்டார்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக ரூ.2000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத் துறை அமைச்சர் ஏ.ஆர்.சக்கரபாணி செய்தியாளர்களிடம் இத்திட்டத்தை செயல்படுத்தப்படுவது குறித்து பேசினார்.

தமிழகத்தில் உள்ள 2,07,66,950 குடும்ப அட்டை தாரரக்ளுக்கு முதல் தவணை நிவாரண நிதியாக 2000 ரூபாய் அளிக்கப்பட உள்ளது. அதற்காக ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் தினமும் 200 குடும்ப அட்டைதாரர்கள் வீதம் டோக்கன் வழங்கப்பட்டு, காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நிவாரண நிதி வழங்க உள்ளது. இந்த 2000 ரூபாய்யை நான்கு 500 ருபாய் தலாகவோ அல்லது ஒரு 2000 ருபாய் தலாகவோ தரலாம் என ஸ்டாலினின் கூறியுள்ளார்.

இத்திட்டத்தை அமைச்சர்கள் மாவட்ட வாரியாக தொடங்கி வைக்க உள்ளனர். இந்த நிவாரண நிதி தொகைகள் சரியான முறையில் மக்களை சென்று சேர்கிறதா என்பதை கண்காணிக்க உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். திட்டத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்பட்டுவிடாமல் இருக்க மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்துக் கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர். மேலும், இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் தமிழக அரசிற்கு 4,153 கோடி செலவாகும் என்று கூறியுள்ளார்.

Share This Article
Exit mobile version