தமிழக முதல்வர் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்…

1 Min Read

மத்திய அரசின் உரிய விருதுகளான பத்ம ஸ்ரீ , பத்ம விபூஷன், வீர் சக்ரா ஆகிய விருதுகளை பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தமிழக மக்கள் சார்பாகவும் எனது சார்பாகவும் தெரிவிக்கிறேன் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு மேலும் பெருமை சேர்க்கக்கூடிய வகையில்  அவருக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அனிதா பால்துரை இந்திய மகளிர் கூடைப்பந்தாட்ட அணியின் தலைவர் இவரின் விளையாட்டு  திறனை அங்கீகரித்து, பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. வில்லுப்பாட்டு கலைக்கு ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக திருநெல்வேலியை சேர்ந்த சுப்பு ஆறுமுகம் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது  அறிவிக்கப்பட்டுள்ளது. புகழ் பெற்ற தமிழ் பேராசிரியர் சாலமன் பாப்பையா  தமிழ் மொழிக்கு ஆற்றிய வரும் பணிக்காகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சங்க இலக்கியங்களையும் திருக்குறளையும் இனிய தமிழில் நகைச்சுவை கலந்து விளக்கியும்,  வருகிறார் இதற்காக இவருக்கு  பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. கோயம்புத்தூரை சேர்ந்த பாப்பம்மாள் வயதான நிலையிலும் விவசாயம் செய்து வருகிறார் இதனை பாராட்டி அவருக்கு  பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. கர்நாடக இசைப்பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத்துக்கு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.

மறைந்த ஓவியர் கே.சி.சிவசங்கர் அவர்களுக்கு  பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக சேவையை பாராட்டி கரூரை சேர்ந்த மாராச்சி சுப்புராமன்  அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. மருத்துவ துறையில்,  டாக்டர் திருவேங்கடம் வீரராகவன் அவர்களின் சிறப்பான  சேவையை பாராட்டி அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வேம்பு தொழில் வளர்ச்சியினை அங்கீகரிக்கும் விதமாக தஞ்சாவூரை சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீதர்  அவர்களுக்கு  பத்மஸ்ரீ விருது  அறிவித்துள்ளது. மேலும் மறைந்த சுப்பிரமணியன் சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அவர்களின்  சமூக சேவையை அங்கீகரிக்கும் விதமாக பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.

Share This Article
Exit mobile version