கொரோனா பரவலை தடுப்பது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் அழைப்பு

Vijaykumar 1 View
1 Min Read

தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தொற்றின் பரவல் நாளுக்கு நாள்அதிகரித்து வரும் நிலையில் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து ஆலோசனை செய்ய அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களுக்கும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள10-வது தளத்தில் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு ஆலோசனை செய்ய அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் தலா இருவர் மட்டும் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Exit mobile version