தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மே 10 ஆம் தேதி முதல் பொது போக்குவரத்து அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. முள்கள பணியாளர்களுக்காக சென்னையில் மட்டும் 200 பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகிறது. இந்த போருந்துகளில் போது மக்களுக்கு அனுமதி இல்லை. கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் ரயில் சேவையும் குறைந்த அளவில் இயக்கப்படுகிறது.
கொரோனா பரவல் குறைத்து வருவதால் 27 மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து சேவை இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். பேருந்து சேவை எப்போது இயக்கப்படும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
அடுத்த தளர்வுகள் அறிவிக்கும் போது பேருந்து சேவையை இயக்குவது குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.