தமிழகப் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

Selvasanshi 6 Views
2 Min Read
  • தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் தொடர்பாக முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார்.
  • வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் பள்ளிகளில் கேமரா பொருத்தும் பணிகள் இருப்பதால் ஏப்ரல் 2 முதல் 5ஆம் தேதி வரை பள்ளிகளை திறந்திருக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.
  • தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் பல மாதங்களாக மூடப்பட்டிருந்தன.
  • கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு பெற்றோர்களிடம் கருத்து கேட்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், பிப்ரவரி மாதத்தில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது.
  • மேலும் தமிழக அரசு, 9 முதல் 11ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.
  • அதேநேரத்தில் பாடத்திட்டங்களை நடத்தி முடிக்க மாணவர்கள் தவறாமல் பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது.
  • இதற்கிடையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். மேலும் வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் மாவட்ட அளவில் அல்லது பள்ளி அளவில் பருவத்தேர்வுகளை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
  • அதற்குபிறகு பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் 9 மற்றும் 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மேலும் ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு தமிழகப் பள்ளிகளுக்கு விடுமுறை என்ற தகவல் பரவியது.
  • ஆனால் தமிழகப் பள்ளிகளுக்கு விடுமுறை என்ற தகவலை மறுத்து பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
  • இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்தில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
  • இந்த சுற்றறிக்கையில், வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் பள்ளிகளில் கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற உள்ளது . இதனால் ஏப்ரல் 2 முதல் 5ஆம் தேதி வரை பள்ளிகள் திறந்திருக்க வேண்டும். இதனை முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
Share This Article
Exit mobile version