- Advertisement -
Homeசெய்திகள்மார்ச் 23 முதல் மார்ச் 27 வரை தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

மார்ச் 23 முதல் மார்ச் 27 வரை தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

- Advertisement -

மார்ச் 23 ஆம் தேதி முதல் மார்ச் 27 ஆம் தேதி வரை கேரளா மற்றும் அதனை ஒட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஒரு கிலோமீட்டர் உயரம் வரை நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை ஆய்வு மையம், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும் என தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும். குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருச்செந்தூர் (தூத்துக்குடி) 2, தென்காசி 1, மணிமுத்தாறு (திருநெல்வேலி)ஆகிய பகுதிகளில் தலா 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை.

- Advertisement -
- Advertisement -
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -
Related News
- Advertisement -