தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கு மழை என்று வானிலை ஆய்வு மையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் சென்னை உட்பட வட மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும்.
இன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மார்ச் 7ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 8 முதல் மார்ச் 10ஆம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக இருக்கும். மேலும் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடத்தக்க அளவு மழை எங்கும் பதிவாகவில்லை. இதனால் மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் அறிவிக்கவில்லை.