ஒரு சில மாவட்டங்களில் மூன்று நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

Selvasanshi 6 Views
1 Min Read

சென்னையில் ஒரு சில பகுதிகளில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வளிமண்டல மேலடுக்கில்,மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவும், கீழடுக்கில் கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு.

இன்று முதல் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும்.

பிப்ரவரி 21ஆம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிவுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பிப்ரவரி 22ஆம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பிப்ரவரி 23, 24ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையாகவே இருக்கும் .

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கோத்தகிரி, குன்னூர் ,சோத்துப்பாறை, அலகாரி எஸ்டேட் ,தண்டராம்பேட்டை , மேமாத்தூர், தழுத்தலை ஆகிய இடங்களில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This Article
Exit mobile version