தென் கேரளா முதல் தெற்கு கொங்கன் 0.9 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளி மண்டல காற்றழுத்த சுழற்சி காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யும்.
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். மீதமுள்ள மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும்.
நாளை தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது மழை பெய்யும்.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.
ஏப்ரல்15-ந்தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி- மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஏப்ரல்16-ந்தேதி நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் உள்ள ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 17-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டிய மாவட்டங்கள், தமிழக வட உள் மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 35 ஆகவும் மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 6 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. வேடசந்தூரில் 5 செ.மீ. மழையும், குன்னூர், குடவாசல், கயத்தாறு போன்ற பகுதிகளில் தலா 4 செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது என்று வானிலை மையம் கூறியுள்ளது.