ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது – தமிழக அரசு திட்டவட்டம்

Selvasanshi 4 Views
3 Min Read

ஹைலைட்ஸ்:

  • ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்.
  • தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
  • ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுவதாகக் கருதி கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அப்போது போராட்டத்தின் உச்சக்கட்டமாக கிராம மக்கள் 2018-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி பேரணி ஒன்றை நடத்தினார்கள்.

இந்த பேரணி கலவரமாக மாறியது. இந்த கலவரத்தின் போது கிராம மக்கள் 13 பேர் காவல் துறைனரால் சுட்டு கொல்லப்பட்டார்கள். இதற்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலைக்குச் சீல் வைக்கப்பட்டது.

நாடு முழுவதும் இரண்டாவது அலையாக கொரோனா வைரஸ் பரவிவருவதால், தற்போது மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்து வருகிறது. இந்த பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு மேற்கொண்டு பல முயற்சிகளை வருகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மனு:

வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் யுனிட் இருக்கிறது.

இந்த யுனிடில் நாள் ஒன்றுக்கு 500 டன் ஆக்சிஜன் தயாரிக்க முடியும். இதன்முலம் தமிழக மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தீர்க்க முடியும் என வேதாந்தா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இடை காலமாக ஆக்சிஜன் தயாரிக்கும் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் யுனிடை திறக்க அனுமதி அளிக்கவும், ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கும் ஆக்ஸிஜனை இலவசமாக வழங்க அனுமதி வேண்டியும் உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

மனு தாக்கல் விசாரணையில், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் மீது நம்பிக்கை இல்லை, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு:

ஏற்கனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பல்வேறு விதிமுறைகளை மீறியதால் இந்த ஆலை மூடப்பட்டு இருந்தது. தற்போது ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஆலை திறப்பதாக கூறுவதை தமிழக அரசு நம்பவில்லை. இதனால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று தமிழக அரசு சார்ப்பில் உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

தற்போது எந்த வகையிலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்க கூடாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையின் போது ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று தமிழக அரசு சார்ப்பில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தமிழக அரசின் வாதத்தை கேட்ட தலைமை நீதிபதி, தமிழக அரசே ஸ்டெர்லைட் ஆலையை எடுத்து நடத்தலாம் என்று யோசனை கூறினார். ஆனால் தமிழக அரசு இந்த யோசனைக்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறது.

தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் நடத்திய மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று கிராம மக்கள் கூறினார்கள். மீறி ஆலையை திறந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும் என்றும் கிராம மக்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தூத்துக்குடியில் மீண்டும் தூப்பாக்கிச்சூடு நடக்க கூடாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக உள்ளது.

Share This Article
Exit mobile version