10 ஆம் வகுப்பு முடித்தவரா நீங்கள் ? ரூ.78,000/- சம்பளத்தில் தமிழகத்தில் ஒன்றிய அரசு வேலை!
Scientific Officer, Technical Officer, Technician, Stenographer, Upper Division Clerk, Security Guard & Work Assistant & Canteen Attendant, Stipendiary Trainee-I, Stipendiary Trainee-II ஆகிய பணியிடங்களை நிரப்ப கடந்த மே மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்து வெளியானது.
இந்த ஒன்றிய அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முதலில் மே 14 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது.
அதன் பின்,தற்போது இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுவரை விண்ணப்பிக்க தவறியவர்களுக்காக அந்த வாய்ப்பு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியுள்ளவர்கள் உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கெள்ளவும் .
தமிழகத்தில் ஒன்றிய அரசு பணிகள் காலியாக உள்ள மொத்தம் 337 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் வயது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும்.
10 / 12 ஆம் வகுப்பு/ ITI/ Degree/ BE/ B.Tech/ B.Sc/ Ph.D ஆகியவற்றில் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதிவு செய்வோர் அந்தந்த பணிக்கு ஏற்ப Written Exam, Personal Interview, Physical Standard Test, Physical Test & Events, Preliminary Test, Advanced Test, Trade/Skill Test இதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு செய்யப்படும் வருக்கு மாதம் ரூ.18,000/- முதல் ரூ.78,800/- வரை சம்பளம் வழங்கப்படும் .
இந்த அரசு வேலைக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணையதளத்தின் முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.
மேற்கண்ட பணியிடங்களுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள இணையதளத்தின் முலம் 31.07.2021 வரை விண்ணப்பிக்கலாம்.