- Advertisement -
Homeசெய்திகள்ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் PF வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிமுறை அமல்

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் PF வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிமுறை அமல்

- Advertisement -

2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி அறிவித்தார். அந்த பட்ஜெட்டில் ஊழியர்களுக்கான PF அறிவிப்பில் சில மாற்றங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரூ.2.5 லட்சத்திற்கு அதிகமான PF தொகை பங்களிப்புக்கு வழங்கப்படும், வட்டித் தொகைக்கு வரி வசூலிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இதனால் அதிகமாக வருமானம் வாங்குபவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள்.

எனவே மத்திய அரசு இதில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தது. அதன்படி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ரூ.2.5 லட்சம் வரம்பை ரூ.5 லட்சமாக மாற்ற உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சலுகை நிறுவனங்களின் பங்களிப்பு இல்லாத PF வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும். மத்திய அரசு இந்த புதிய விதிமுறையை 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல்செயல்படுத்த உள்ளது.

மத்திய அரசு வெளியிட்ட இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த புதிய PF விதிமுறைகள் மூலமாக 93 சதவிகித பயனாளர்கள் பயனடைவார்கள். அவர்கள் பெறும் வட்டி வருவாய்க்கு முற்றிலும் வரி விலக்கு கிடைக்கும்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த அறிவிப்பு மூலமாக நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் அவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

- Advertisement -
- Advertisement -
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -
Related News
- Advertisement -