நம் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்களை பார்ப்போம்!

Selvasanshi 17 Views
4 Min Read

ஹைலைட்ஸ்:

  • இரும்புச் சத்து குறைபாடு இருந்தால் உங்கள் சருமம் வெளிரிய நிறத்தில் இருக்கும்.
  • இரும்புச் சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம்.
  • கர்ப்பிணி பெண்களுக்கு இரும்புச் சத்துக் குறைபாடு அதிகமானால், தாய்-சேய் இருவருக்கும் பாதிப்பு.

இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான முக்கிய காரணம்,பொதுவாக நாம் உண்ணும் உணவில் இரும்புச்சத்து குறைவாக இருப்பது தான். இரும்புச்சத்து உறிஞ்சுதலில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்தியாவில் 80 சதவிகிதம் பேருக்கு இரும்புச் சத்துக் குறைபாடு உள்ளதாம். இரும்புச் சத்துக் குறைபாடு அதிகரிக்கும்போது, அது ரத்தசோகை ஏற்படுகிறதாம்.

இரும்புச் சத்துக் குறைபாடு ஆண்களைவிட பெண்களுக்கு தான் அதிகம் இருக்கிறது. இருபாலரின் உடல் ஆற்றல் அதிகரிக்க, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இரும்பு சத்து மிகவும் அவசியமானதாகும்.

தினசரி நாம் சரிவிகித உணவை எடுத்து கொள்வதன் மூலம் இரும்புச் சத்துக் குறைபாட்டை போக்கலாம். நம் உடலில் ஹீமோகுளோபின் குறைய காரணம் இரும்புச் சத்து தான். பொதுவாக இரும்பு சத்து அதிகம் உள்ள உணவை உண்ணாமல் இருப்பவர்களுக்கு ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

இரும்புச் சத்துக் குறைபாட்டின் அறிகுறிகள்:

சரும நிற மாற்றம்

உங்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு இருந்தால் உங்கள் சருமம் வெளிரிய நிறத்தில் இருக்கும். அல்லது மஞ்சள் நிறத்தில் வெளிரிப் போய் இருப்பீர்கள். இரத்த சிவப்பணுக்களில் உள்ள இரும்புச் சத்து குறையும் போது இந்த மாதிரி சரும நிற மாற்றம் உண்டாகிறது. நம் வாயின் உள்பக்கம் இரத்த ஓட்டம் இல்லாமல் வெள்ளை நிறத்தில் இருப்பது, உதடு, விரல் நகங்கள் வெள்ளை நிறமாக மாறுவது போன்றவைக்கு காரணம் இரும்புச் சத்துக் குறைபட்டு தான். சாதாரணமாக இந்தப் பகுதிகள் பிங்கிஸ் நிறத்தில் இருக்கும்.

சோர்வாகவும், சோம்பேறியாகவும் இருத்தல்

இரும்புச் சத்து குறைபாடு இருப்பவர்கள் எப்போதும் சோர்வாகவும், சோம்பேறியாகவும் இருப்பார்கள். இவர்கள் அன்றாட வேலைகளை கூட சரியாக செய்ய முடியாமல் தவிப்பார்கள். எப்பொழுது பார்த்தாலும் தூங்கிக் கொண்டு, தெளிவாக சிந்தனை இல்லாமல் எரிச்சல் அடைவார்கள். நீங்கள் போதிய ஒய்வு எடுத்தும் சோர்வு போகவில்லை என்றால், நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

மூச்சு விடுவதில் சிரமம்

இரும்புச் சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். இவர்களுக்கு வழக்கத்திற்கு மாறாக திடீரென இதயத் துடிப்பு வேகமாகும். மாடிப்படிகளில் ஏறும் போது மூச்சு வாங்க ஆரம்பிக்கும், கடினமான வேலைகளை செய்யும் போது இவர்களுக்கு இதயத் துடிப்பு அதிகரிக்கும்.

ஒழுங்கற்ற இதயத் துடிப்புக்கு காரணம் இரும்புச் சத்து குறைப்பாடு தான். இரும்புச்சத்து குறைப்பாட்டால் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. இரத்ததில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல இதயம் கூடுதலாக வேலை செய்ய வேண்டியிருக்கும்.

கால்கள் உணர்வு இல்லாமல் இருத்தல்

குறிப்பாக இரவு நேரங்களில் படுக்கும் சமயத்தில் கால்கள் உணர்வு இல்லாமல் இருப்பது போல் தோன்றும். இவர்கள் அவ்வப்போது கால்களை அசைப்பது நல்லது. ஒரே இடத்தில் கால்களை அசைக்காமல் வைத்திருக்கும் போதும், இரும்புச் சத்து குறைபாடு இருக்கும் போதும் இது போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.

அதிகநேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருத்தால் உடனே கால் மரத்து போதல், கால் உளைச்சல், விர் என்று பிடித்தல், கால் நமநமப்பு போன்றவைகள் ஏற்படுவது போல் உணர்கிறீர்கள். இதற்கு காரணம் நம் உடலில் போதுமான அளவு இரும்புச் சத்து இல்லாதது தான்.

இரும்புச் சத்து உணவுகள்

இரும்புச் சத்து குறைப்பாட்டை போக்க இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. இரும்புச் சத்து குறைப்பாடு உள்ளவர்கள் அச்சுவெல்லம், முருங்கைக்கீரை, கடலைமிட்டாய், பேரிச்சம்பழம், மாதுளை, அத்திப்பழம், கொய்யாப்பழம், உலர் திராட்சை பழம், மாம்பழம், தர்பூசணி, கீரைகள், கேழ்வரகு, கம்பு, சோளம், எள், மீன், நண்டு, இறைச்சி, சோயாபீன்ஸ், முருங்கைக்காய், காலிஃப்ளவர் ஆகிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இது தவிர இரும்புச்சத்து மாத்திரைகள், மல்ட்டி வைட்டமின் மாத்திரைகள் எடுத்து கொள்ளலாம். இந்த நோயின் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், உரிய சிகிச்சை மேற்கொள்ளவேண்டியது நல்லது.

அதிகம் கர்ப்பிணி பெண்களை பாதிக்கும்.

பொதுவாகப் பெண்களுக்கு மாதவிலக்கு மற்றும் கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்துக் குறைபாடு அதிகமாக இருக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு இரும்புச் சத்துக் குறைபாடு அதிகமானால், தாய்-சேய் இருவரும் பாதிக்கப்படுவார்கள். இதனால் கர்ப்பிணிகள் ஒவ்வொரு மாதமும் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையைப் பரிசோதிக்க வேண்டும். ஒன்பதாவது மாதத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு போதிய அளவுக்கு இரத்தத்தில் ஹீமோகுளோபின் இல்லையென்றால் அவருக்கு ரத்தம் செலுத்துவது அவசியமாக இருக்கும். ஹீமோகுளோபினை அதிகரிக்க கர்ப்பிணி பெண்கள் இரும்புச் சத்து உள்ள உணவு பொருட்களை அதிகம் எடுத்து கொள்ளவேண்டும்.

Share This Article
Exit mobile version