ஆமணக்கு எண்ணெய் பயன்பாடுகள்

sowmiya p 18 Views
4 Min Read

தாவர எண்ணெயான ஆமணக்கு எண்ணெய் ரிச்சினஸ் கொம்யூனிஸ் எனப்படும் ஆமணக்குச் செடியின் விதைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஆப்பிரிக்கா, தென்அமெரிக்கா, இந்தியா ஆகிய நகரங்களில் அதிகமாக விளையக்கூடியது. இதை பொதுவாக சமையலுக்கு பயன்படுத்துவதில்லை மற்றும் உலகம் முழுவதிலும் குறைந்த அளவே உற்பத்தி ஆகிறது.

ஆமணக்கு எண்ணெய்  வகைகள்:

  1. ஆமணக்கு எண்ணெய்; விளக்கெண்ணெய்
  2. கால்நடையியல். ஆமணக்கு எண்ணெய் \ விளக்கெண்ணெய்
  3. பொறியியல். தாவர எண்ணெய்
  4. வேதியியல். ஆமணக்கெண்ணெய்
  5. வேளாண்மை. ஆமணக்கெண்ணெய்
  • அழகு மற்றும் உடல்நல தேவைகளுக்கு அதிக பயனை தருகிறது. முடி உதிர்வு மற்றும் பெரும்பான்மையான தோல் பிரச்சினைகளிலிருந்து நிம்மதியைத் தருகிறது. ஆனால் ஏற்கனவே தோல் அலர்ஜி போன்ற பிற வியாதிகள் கொண்டவர்கள் ஆமணக்கு எண்ணெயை தவிர்த்தல் நல்லது. இதன் பயன்பாட்டு வழிமுறைகள் மற்றும் நன்மைகளை அறிய கட்டுரையை தொடர்ந்து படிக்கவும்.

ஆமணக்கு எண்ணெயும் சரும நலன்களும்:

  • முகப்பரு முதல் உடல்சூடு வரை சரி செய்வதற்கு ஆமணக்கு எண்ணெயில் பல மருத்துவ குணங்களும் நன்மைகளும் உள்ளன. சருமத்துடன் சேர்ந்து இது அலர்ஜி மற்றும் நுண்ணுயிரி எதிர்ப்பியாக செயல்படுகிறது. மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறவும் ஆமணக்கு எண்ணெய் உதவுகிறது. இதை குடிப்பதால் உடலின் ஆற்றல் அதிகரிக்கிறது. தலையின் மேற்பரப்பில் ஏற்படும் தொற்று நோய்களை சரி செய்வதிலும் ஆமணக்கு உதவுகிறது.

​முகப்பருவை குறைக்கும்:

  • ஆமணக்கு எண்ணெய் அலர்ஜி எதிர்ப்பு குணநலன் கொண்டது. சரும பராமரிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகளை தீர்ப்பதில் ஆமணக்கு முக்கிய பங்காற்றுகிறது. “கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்பார்கள். அதுபோல எவ்வளவு அழகிய முகம் இருப்பினும் ஒரு சிறு முகப்பரு ஏற்பட்டால் பலரும் கவலை கொள்கிறார்கள். பலருக்கு அதை குணப்படுத்துவது பெரும்பாடாய் போகிறது. அப்படி பாதிக்கப்பட்ட பலருக்கும் விலைமதிப்பற்ற பரிசாய் முகப்பருவை அகற்றும் மருந்தாக பயன்படுகிறது ஆமணக்கு எண்ணெய். தூங்கச் செல்வதற்கு முன்பு தேங்காய் எண்ணெயுடன் கலந்து பாதிக்கப்பட்ட சருமப் பகுதிகளில் அதை தடவவும்.

​சுருக்கங்களில் இருந்து பாதுகாப்பு:

  • பலரும் சிறுவயதிலேயே முதிர்ச்சியான தோற்றமடைந்து காணப்படுவதை பார்த்திருப்போம். காரணம் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் போன்றவை. ஆமணக்கு எண்ணெய் உங்கள் சருமத்தை காய விடாமல் ஈரப்பதம் தக்க வைக்கும் வளையம் போல செயல்படுகிறது. இதனால் சுருக்கங்கள் மற்றும் பிற வயதான தோற்றங்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. கண்களை சுற்றி ஏற்படும் வீக்கம் மற்றும் சுருக்கங்களை குறைக்கிறது. இதில் அலர்ஜி எதிர்ப்பு திறன் உள்ளதால் முகத்தை ஈரப்பதமாக வைத்து சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கின்றது. உறங்கப் போவதற்கு முன்பாக கண்களுக்கு கீழ் எண்ணையை தடவி ஒருவாரத்திற்கு மசாஜ் செய்யவும்.

​சரும பாதுகாப்பு மற்றும் ஈரப்பதம்:

  • ஆமணக்கு எண்ணை இயற்கையாகவே ஈரப்பதத்தை தக்க வைப்பதாய் இருப்பதால் கடைக்கு சென்று உங்கள் பணத்தை விழுங்கும் அழகு பொருட்கள் வாங்கும் தேவையை குறைக்கிறது. உங்கள் அழகிய முகம் இளமையாகவும், ஊட்டச்சத்து மிக்கதாகவும், சுறுசுறுப்பானதாகவும், பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இது உதவுகிறது. இதனால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களும் தடுக்கப்படுகிறது. ஆரோக்கியமான சருமத்தை பாதுகாக்க தேவையான இயற்கையான கொழுப்பு அமிலங்கள் எண்ணெயில் காணப்படுகிறது.

சன் ஸ்க்ரீன்:

  • ஆமணக்கு எண்ணெயின் மற்றுமொரு சிறந்த பயன் அது உங்கள் சருமத்தை சூரியக் கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கிறது. மாறிவரும் சுற்றுப்புற சூழல், புவி வெப்பமயமாதல் ஆகிய காரணிகளால் அதிகப்படியான வெயில் தாக்கி சூட்டினால் வலி மற்றும் இதர பிரச்சனைகள் ஏற்படுகிறது. அத்தகைய அதிகமான வலி மற்றும் பிற விளைவுகளிலிருந்து உங்களை பாதுகாக்கும் இயற்கை அரணாக ஆமணக்கு பயன்படுகிறது. ஆமணக்கு எண்ணெய் அலர்ஜி எதிர்ப்பு குணத்தை தன்னகத்தே கொண்டுள்ளதால் அலர்ஜி மற்றும் நுண்ணுயிரிகளுடன் போராடி சருமத்தை பாதுகாக்கிறது.

உடலுக்கு ஆமணக்கு எண்ணெய்:

  • ஆமணக்கு எண்ணெய் அடர்த்தி அதிகமான எண்ணெயாவதால் பிற சாதாரண எண்ணெய்கள் போல நேரடியாக உடலில் பயன்படுத்தக்கூடாது. தேங்காய், பாதாம் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து சருமத்தில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதிகமான ஈரப்பதம் மற்றும் மென்மை வேண்டுமானால் சியா வெண்ணெயை கூட பயன்படுத்தலாம். எண்ணெய் தடவும் உடற்பரப்பை தண்ணீரால் சுத்தம் செய்து உலர்ந்த துண்டால் துடைத்த பின்பே உறங்கச் செல்வதற்கு முன் பயன்படுத்தவும்.

இரவு நேர மசாஜ் ஆயில்:

  • இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு விடலாம் அல்லது 5-10 நிமிடங்களுக்கு பிறகு சூடான தண்ணீரில் நனைத்த துணியால் துடைத்து விடலாம். இவைதான் ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் வழிமுறைகளாகும். உங்களுக்கு வேண்டுமானால் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவ நிபுணர்களின் பரிந்துரை மற்றும் ஆலோசனைகளை கேட்டுக்கொள்ளலாம். ஆமணக்கு எண்ணெய் புத்தம் புது பொலிவுடன் கூடிய ஆரோக்கிய சருமத்தை பெறுவதற்கான எளிமையான மற்றும் இயற்கையான செலவு குறைவு வழிமுறையாகும்.

 

Share This Article
Exit mobile version