ராணிப்பேட்டை அருகே மணல் கடத்துதலில் ஈடுபட்ட 19 பேர் மீது வழக்குப்பதிவு

Vijaykumar 1 View
1 Min Read

ஹைலைட்ஸ்:

  • ராணிப்பேட்டை அருகே மணல் கடத்தப்படுவதாக வெளியான புகாரில் ஜேசிபி வாகன ஓட்டுநர் கைது.
  • மண் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த புகாரில் ஈரோடு மாவட்ட ஆவின் பொதுமேலாளர் முருகேசன் கைதுசெய்யப்பட்டார்.
  • 19 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

துணை ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ராணிப்பேட்டை அருகே மணல் கடத்தப்படுவதாக வெளியான புகாரில் அப்போதைய அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பலரும் தப்பிசென்ற நிலையில் மணல் கடத்தும் பணியில் ஈடுபட்ட ஜேசிபி வாகனத்தின் ஓட்டுநர் மட்டும் கைது செய்யப்பட்டார். தப்பி சென்ற சரவணன் என்பவர் செல்போனை விட்டுச் சென்றுவிட்டார். அந்தவகையில் அவர் மொபைலின் அழைப்புகள் மற்றும் வாட்சப் தகவல்களை பரிசோதித்ததில் அவருடன் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் காவல் துறையினருக்கும் நேரடியாக பல தொடர்புகள் இருப்பது தெரியவந்தது.

இந்த வழக்கை மேலும் விசாரித்ததில், ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியராக இருந்து ஈரோடு மாவட்ட ஆவின் பொது மேலாளராக மாற்றம்செய்யப்பட்ட முருகேசனுக்கு மணல் கடத்தல் கும்பல் நபர் சரவணன் பணம் கொடுத்ததும் கார் வாங்கித் தந்ததும் போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை தவிர மணல் கடத்தலில் மேலும் பல வருவாய்த் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளும் ஈடுபட்டு உதவியது உறுதி செய்யப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 19 அதிகாரிகள் மீது மணல் கடத்தலுக்கு துணைபுரிததாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஈரோடு ஆவின் பொதுமேலாளர் முருகேசன் முதல் குற்றவாளியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share This Article
Exit mobile version